Home | About Us | Services | Press | Education | Discussion Forum | SPM & STPM Leavers | Career | Links | Contact Us

 

நமது நாடு சமய சார்பற்றது!

கா. ஆறுமுகம்

 

கெராக்கான் கட்சியின் 30 வது தேசியப் பேராளர் மாநாட்டை, 29.9.2001இல் தொடக்கிவைத்து உரையாற்றிய துன் டாக்டர் மகாதீர் முகமட், மலேசியா ஒரு இசுலாமிய நாடு என்றார். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 17.7.2007இல், கோலாலம்பூரில் நடந்த ஓர் அனைத்துலகக் கருத்தரங்கில் பேசிய துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீண்டும், மலேசியா ஓர் இசுலாமிய நாடு என்றும் அது மதச்சார்பற்ற நாடு கிடையாது என்றும் கூறினார்.

நாட்டின் தலைவர் களாக இருப்பவர்கள் மலேசியா ஓர் இசுலா மிய நாடு என்று கூறும்போதெல்லாம் நமது நிலை தர்மசங் கடமாகிறது; பயம் உண்டாகிறது. எப்படி மதச்சார்பற்ற நாடாக இருந்த மலேசியா, இசுலாமிய நாடாக உருவானது என்ற கேள்வியும் எழுகிறது.

மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு (Secular State) என்பதற்குப் பல ஆணித்தரமான ஆதாரங்கள் உண்டு. விடுதலைக்கு முன்பு, நமது நாடு எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகக் கூட்டரசு அரசமைப்பு (Federal Constitution) உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டரசு அரசமைப்பின் வழிதான் நாம் தற்போது மலேசியாவை வழி நடத்தி வருகிறோம்.



 

இந்தக் கூட்டரசு அரசமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில், மலேசியா எவ்வகையான நாடாகத் திகழ வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்தன. அவற்றின் ஒட்டுமொத்த தீர்வு மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத் திகழ வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், இசுலாம் மதத்திற்கு ஒரு விசேசமான நிலை அரசமைப்பில் உருவாக்கப்பட்டது. அரசமைப்பு உறுப்பு (Article) 3(1) கூட்டரசின் சமயம் இசுலாம் என்கிறது. இதன் அடிப்படையில்தான் அண்மையக் காலங்களில் மலேசியா எவ்வகை நாடு என்ற பலத்த சர்ச்சைக்குள் உருவாகி வருகின்றன.

அரசமைப்பு உறுப்பு 3(1)இன் அடிப்படை என்ன? அதன் நோக்கம் என்ன? அதை உருவாக்கம் செய்தவர்களின் கருத்து எப்படி இருந்தது? போன்ற வினாக்களுக்கு விடை தேடுகையில் நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், மலேசியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்ப தாகும்.

இது சார்பான சில சான்றுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

1. முன்னாள் நீதித் துறை தலைவர் துன் முகமட் சுபியன் எழுத் துகளின் படி, சம்பிர தாய சாங்கியங்களுக் காகவே இசுலாம் கூட்டரசு சமயமாக உருவாக்கப்பட்டது. உதாரணமாக மாட்சிமை தங்கிய பேரரசர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் விடுதலை நாள் கொண்டாட்டம் போன்றவற்றின்போது இசுலாமிய முறைப்படி சாங்கியங்கள் செய்வதாகும்.
(ஆதாரம்: Mohamed Suffian Hashim, “The relationship between Islam and the state in Malaya (1962)).

2. மற்றுமொரு நீதித்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் சாலே அபாஸ், Che Omar Bin Che Soh என்ற வழக்கிற்கு 1988இல் தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில், உறுப்பு 3(1)இல் உள்ள இசுலாம் என்பது சம்பிரதாய சாங்கியங்களுக்கு மட்டுமே, என்றும் இந்நாட்டின் சட்டங்கள் சமய சார்பற்றவை யாகவே இருக்கும் என்றார்.

3. ஜூன் 1956 முதல் பிப்ரவரி 1957 வரையிலும் தயாரிக்கப்பட்ட ரீட் அரசமைப்பு கமிசன் (Reid Constitutional Commission) அறிக்கையில் இசுலாத்தைக் கூட்டரசுச் சமய மாக பிரகடனப் படுத்தும் சரத்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு குறிப்பிட்டால் அது சமய சார்பற்றக் கொள்கைக்கு முரண் பாடாக அமையும் என்பது ரீட் கமிசனின் கருத்தாகும்.

4. மேன்மைமிகு ஆட்சி யாளர்கள் (சுல்தான்கள்) கூட்டர சின் சமயம் இசுலாம் என்பதை எதிர்த்தனர். அப்படிச் செய்தால் அது ‘தாங்கள் தாம் சமயத்தின் தலைவர்’ என்ற நிலையைப் பாதிக்கும் எனக் கருதினர்.
(ஆதாரம்: Proposal of Their Highness the rulers made to the Constitutional Commission, 12 Sept 1956, Ivor Jennings Papers)

5. ரீட் கமிசன் அறிக்கை யைக் கூட்டணிக் கட்சியின் பணி குழு மறு ஆய்வு செய்யும்போது இசுலாம் கூட்டரசின் சமயம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பணிக்குழுவில் பேசிய துங்கு அப்துல் ரஹ்மான், “ஒட்டு மொத்த அமைப்பில் நமது அரசமைப்பு, கூட்டரசை ஒரு சமய சார்பற்ற நாடாகவே வைத்திருக் கும்” என்ற விளக்கத்தை அளித்தார்.
(ஆதாரம்: 19 வது கூட்டக் குறிப்பு, ஏப்ரல் 17, 1957 CO 941/87)

6. இலண்டனில், மே 1957இல் நடந்த அரசமைப்புச் சார்ப்புடைய பேச்சு வார்த்தைகள் போது, கூட்டணிக் கட்சியின் பிரதிநிதிகள் மலாயா ஒரு சமய சார்பற்ற நாடாகவே விளங்கும் என்றும் அதை ஓர் இசுலாமிய நாடாக்கும் எண்ணமில்லை என்றும் உறுதி வழங்கினர்.
(ஆதாரம்: Memorandum by Jackson 23 May 1957, CO 1030/494(20).

7. ஜூலை 1957இல் நாடாளு மன்றத்தில் கூட்டணி அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில் அரசமைப் பில் உள்ள உறுப்பு 3 (அதாவது கூட்டரசின் சமயம் இசுலாம் என்பது) கூட்டரசின் சமயசார்பற்ற தன்மையைப் பாதிக்காது என அறிவிக்கப்பட்டது.
(ஆதாரம்: White paper 1957, Legislative Council Paper No. 42 of 1957, பக்கம் 18-19.)

8. விடுதலைக்குப் பிறகு, மே 1, 1958இல் நாடாளுமன்றத்தில் பேசிய துங்கு அப்துல் ரஹ்மான், இந்த நாடு இசுலாமிய நாடு அன்று, இசுலாம் என்பது அரசு சமயம் என்றே இருக்கும், எனத் தெளிவுபடுத்தினார்.
(ஆதாரம்: Federal Legis- lative Council Debates, 1 May 1958, பக்கம் 4671-2.)

மேற்கண்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில், நமது கூட்டரசு அரசமைப்பை உருவாக் கியவர்களின் எண்ணங்களில் மலேசியாவை ஒரு மதச் சார்பு டைய நாடாக உருவாக்கும் எண்ணம் கிடையாது எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆதாரங்களின்படி நமது நாடு சமய சார்பற்றது. அதைக் கட்டிக் காப்பது நமது கடமை.

 
 

 

 

Home | About Us | Services | Forum | Press | UPSR, PMR, SPM, STPM, University | SPM & STPM Leavers | Career | Links | Contact Us

DISCLAIMER: tamiliyakkam.com shall not be liable for any loss or damage caused by the usage of any information obtained from this site. 

All Rights Reserved © Tamiliyakkam.com